Get Your Free Audiobook
-
Aakasa Veedugal [Sky Houses]
- Narrated by: Pushpalatha Parthiban
- Length: 6 hrs and 3 mins
Failed to add items
Add to cart failed.
Add to wishlist failed.
Remove from wishlist failed.
Follow podcast failed
Unfollow podcast failed
2 credits with free trial
Buy Now for ₹76.00
No valid payment method on file.
We are sorry. We are not allowed to sell this product with the selected payment method
Publisher's Summary
ஆகாச வீடுகள்' நாவலைப் படித்து முடித்தவுடன், அண்மைக் காலத்தில் தமிழில் வெளிவந்துள்ள சிறந்த நாவல் ஒன்றைப் படித்த மகிழ்ச்சி எனக்கு ஏற்பட்டது. 'தினமணி கதிரில்' இது வெளிவந்தபோது எனக்குப் படிப்பதற்கு ஓய்வு கிடைக்கவில்லை. மேலும் இப்போது வெளிவரும் பல தொடர்கதைகள் வாழ்க்கையோடு சிறிதும் தொடர்பற்றவையாகவும் நுனிப்புல் மேய்பவையாகவும் இருக்கின்றன. 'பத்திரிகைகளில் இன்று தொடர் கதைகளாக வருபவற்றில் சிறந்த தரமான படைப்புக்களும் இருக்கின்றன' என்பதற்கு இந்த 'ஆகாச வீடுகள்' ஓர் எடுத்துக்காட்டு.
நகரவாசியாக இன்று விளங்கும் பெண்மணி ஒருவர் கிராம வாழ்க்கையைப் பற்றி எழுதியுள்ள கதை இது. கிராமத்தின் ஒரு பகுதியான அக்ரஹாரத்தின் கதை. அக்ர ஹாரத்தில் வாழ்ந்துவரும் ஒரு குடும்பத்தை மையமாக வைத்துக்கொண்டு, அந்தக் குடும்பத்தோடு பழகும் வேறு சில குடும்பங்களின் நிலையையும் வெகு நுணுக்கமாகச் சித்தரித்திருக்கிறார்.
திருமதி வாஸந்தி இனிய எளிய மொழிநடையில் எழுதுகிறார். பாத்திரப் படைப்புக்களை அவர்கள் சொற்கள் வாயிலாகவும் செயல்கள் வாயிலாகவும் பளிச்சென்று துலக்கிக் காட்டுகிறார். கதைப் பின்னலில் செயற்கைத் தன்மையில்லை. எல்லாம் இயல்பாக நடக்கக்கூடிய நிகழ்ச்சிகளே. வெளிப்படையாக அவர் எங்கும் ஓங்கிய குரல் எழுப்பவில்லையென்றாலும், இந்தக் கதையின் வாயிலாக அவர் வாயில்லாப் பூச்சிகளான கிராமத்துப் பெண்களுக்காகவும் குழந்தைகளுக்காகவும் போராடும் துடிப்புக் கொண்டவர் என்பதை நிரூபிக்கிறார்.
மீண்டும் சொல்கிறேன்: நான் அண்மைக்காலத்தில் படித்த நாவல்களில் எனக்கு மன நிறைவைத் தந்த உயிர்த் துடிப்புள்ள நாவல் இது. ஆசிரியை திருமதி வாஸந்தி அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.
Please note: This audiobook is in Tamil.