பொறாமை என்பது ஒரு மதில் போல அதில் மனிதர்களாகிய நாம் ஒரு பூனை போல... இடது பக்கம் தீய எண்ணங்களும் தீய செயல்களும் வலது பக்கம் நல்ல செயல்களும் நல்ல எண்ணம் நிறைந்த வாழ்வும் இருக்குமானால் நாம் ஏன் இடது பக்கம் குதிக்க வேண்டும். அடுத்தவர்களை பார்த்து நமக்கு பொறாமை வரும் போது அவர்கள் அந்த நிலையை அடைய என்ன காரணம் என்று யோசித்து நாம் அதைவிட நல்ல உழைப்பை நமக்காக உண்மையாக செய்ய வேண்டும். பிறகு பொறாமை என்பது நம்மை நல்வழியில் செம்மைப்படுத்தும் என்பதில் மாற்றமில்லை... உழைப்பு நல்ல உடல் நலத்தையும் மன நிறைவையும் நல்ல வாழ்வையும் கொடுக்கும்...