மூன்றில் இரண்டு பேர் தன் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என புலம்புவதற்கு காரணம் இந்த வாலிப பருவம் தான்...
எல்லாவற்றிற்கும் முக்கியமாக எதிர் பாலினத்தவர் மீது ஆசைப்பட்டு, உற்றார் உறவினர், அவரவர் குடும்ப சூழ்நிலைகளை மறந்து சுயநலமாக யோசித்து காதல், காமம் வலைகளில் சிக்கி உடலும் மனமும் பாதிக்கப்பட்டு புலம்புவதற்கு காரணம் இந்த வாலிப பருவம் தான்... அதை கடக்கப் பழகிக் கொண்டால் வாழ்க்கை சிறப்பு...
வாலிப பருவம் பற்றி தெரிந்து சரியான புரிதல் இருந்து நம் மனம் கட்டுப்பாட்டில் இருந்து மனநிலை சரியாக இருந்தால் நம் எதிர்கால வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்பதில் துளியும் மாற்றமில்லை...
விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக்கொண்டார்...